தேசியம்
செய்திகள்

‘Protect Ontario’ விளம்பரங்களுக்காக  Ontario மாகாணம் $21.4 வரை செலவு?

‘Protect Ontario’ விளம்பரங்களுக்காக  கடந்த ஆண்டு மாத்திரம் Ontario மாகாண நிதியமைச்சு $21.4 மில்லியன் செலவிட்டது தெரியவந்துள்ளது.

Doug Ford அரசாங்கத்தின் மூன்று அமைச்சுக்கள் கடந்த ஆண்டு விளம்பரங்களுக்காக $55 மில்லியன் செலவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின்படி இந்தத் தரவு வெளியானது.

2025-26 நிதியாண்டில் ஏற்பட்ட மொத்தம் $21.4 மில்லியன் விளம்பரச் செலவுகளில், சுமார் $19.5 மில்லியன் ‘Protect Ontario’ என்ற கருப்பொருளைக் கொண்ட விளம்பரங்களைத் தயாரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் செலவிடப்பட்டதாக நிதியமைச்சகத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

முந்தைய ஆண்டை விட, விளம்பரத்திற்காக நிதி அமைச்சு சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைவான தொகையை செலவிட்டது.

2024-25 ஆம் ஆண்டில் விளம்பரப் பிரச்சாரங்களுக்காக அது ஏறக்குறைய $32.6 மில்லியன் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து

Lankathas Pathmanathan

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த மத்திய வங்கியின் வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment