தேசியம்
செய்திகள்

கனடாவில் தேடப்படும் குற்றவாளி ஐரோப்பாவில் கைது

கனடாவில் தேடப்படும் மிக முக்கியமான குற்றவாளிகளில் ஒருவரை Spain காவல்துறை கைது செய்துள்ளது.

Spain காவல்துறையினரால் கனடாவில் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான All Boivin கைது செய்யப்பட்டதை Quebec மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியது.

2023-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த இவர் வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டதை Quebec காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

36 வயதான All Boivin கைது தொடர்பாக, ஐரோப்பிய செயல்பாட்டுக் குழுவுடன் தொடர்பில் இருப்பதாக Quebec காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கைது Quebec மாகாண பொது பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Quebec மாகாணத்தில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் All Boivin இடம்பெற்றுள்ளார்.

இவர் கனடாவில் தேடப்படும் சந்தேக நபர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related posts

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரி: Donald Trump

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment