தேசியம்
செய்திகள்

CUSMA முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை “நவீனமயமாக்க” முயல்கிறோம்: Mark Carney

CUSMA என அழைக்கப்படும் முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை “நவீனமயமாக்க” அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.

ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதியின் ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என Mark Carney கூறினார்

புதன்கிழமை (24) Donald Trump-புடன் நடத்திய தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, வியாழக்கிழமை (25) காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Mark Carney இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த உரையாடலில் CUSMA ஒப்பந்தம் விவாதிக்கப்படவில்லை என்பதை Mark Carney உறுதிப்படுத்தினார்.

எப்போது வேண்டுமானாலும் ஒரு மோசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு என கூறிய அவர், கனடா அவ்வாறு செய்ய போவதில்லை எனவும், இந்த முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒரு உண்மையான ஒப்பந்தமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

CUSMA காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இல்லை என கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra அண்மையில் கனடிய தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துகள் குறித்து பிரதமரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமெரிக்க ஜனாதிபதியை பொறுத்தவரை, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவில் இருப்பதாக தோன்றும் நிலையில், திடீரென அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விடுகிறது என Mark Carney கூறினார்.

July 1-ஆம் திகதிக்குள், மூன்று நாடுகளின் அதிகாரிகளும், CUSMA ஒப்பந்தத்தை 16 ஆண்டு காலத்திற்கு புதுப்பிக்க விரும்புகிறார்களா அல்லது வருடாந்த மறு ஆய்வு செயல்முறைக்கு ஒப்புக்கொள்ள விரும்புகிறார்களா என்பதை தத்தமது அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காலக்கெடு அண்மிக்கும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

Related posts

Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather

Lankathas Pathmanathan

பணவீக்க விகிதம் June மாதத்தில் 8.1 சதவீதமாக பதிவானது

வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment