தேசியம்
செய்திகள்

FIFA குழுநிலை போட்டிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டிக்கு கனடாவின் வெற்றி காரணம்?

கனடாவின் சரித்திரம் படைத்த FIFA உலகக் கோப்பை 2026 வெற்றியானது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் பார்க்கப்பட்ட குழுநிலைப் போட்டியாக மாறியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் Qatar அணியை 6-0 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது.

இதன் மூலம் ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Qatar-ருக்கு எதிரான கனடாவின் வெற்றியானது, இதுவரை நடந்த குழுநிலை போட்டிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டியாக மாறியுள்ளது.

11.7 மில்லியன் பார்வையாளர்களை எட்டி, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் பார்க்கப்பட்ட குழுநிலை போட்டியாக இந்த ஆட்டம் சரித்திரம் படைத்தது.

11.7 மில்லியன் தனித்துவமான கனடிய பார்வையாளர்கள் இந்த போட்டியின் சில பகுதிகளை கண்டுகளித்தனர்.

2026 FIFA உலகக் கோப்பையின் பிரத்தியேக கனடிய ஒளிபரப்பு உரிமைகளை Bell Media நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர் வருகை மீண்டும் சரிவை எட்டியது

Lankathas Pathmanathan

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடிய கால்பந்து அணியின் இறுதி ஆட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment