தேசியம்
செய்திகள்

வடமேற்கு B.C. முதற்குடியினர் பிரதேசத்திலிருந்து ஐந்து பேர் வெளியேற்றம்

வடமேற்கு British Columbia-வின் முதற்குடியினர் பிரதேசத்திலிருந்து ஐந்து பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

British Columbia-வின் வடமேற்குப் பகுதியில் உள்ள Taku River Tlingit  முதற்குடியினர் சமூகம், ஐந்து பேரை தங்கள் பிரதேசத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு வெளியேற்றியுள்ளது.

இதற்கான அறிவித்தல் வியாழக்கிழமை (18) வெளியானது

அதில் Corney McMahan, Kenny Folbar, Donald Maxwell, Jared Strasdin, Lynzee Silverfox ஆகிய ஐந்து பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

குறிப்பிட்ட ஐந்து பேரும் June 2029 வரை Taku River Tlingit பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்படுகிறது.

சமூகத்திடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர்கள் ஐவரும், தமது சமூக உறுப்பினர்களின் “பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்துவதாக முதற்குடியினர் பிரதேச மன்றம் தீர்மானித்தது

Related posts

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர Alberta தயார்

Lankathas Pathmanathan

Dundas புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து!

Lankathas Pathmanathan

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan

Leave a Comment