தேசியம்
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்புக்காக 60 ஆயிரம் பேர் பணியமர்த்தல்?

October பொது வாக்கெடுப்பு பணிகளுக்காக Alberta தேர்தல் திணைக்களம் 60,000 பேரை பணியமர்த்துகிறது.

Alberta வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இது என  தேர்தல் திணைக்களம் கூறுகிறது.

October 19  நடைபெற இருக்கும் பொது வாக்கெடுப்புக்காக குறைந்தபட்சம் 60,000 பணியாளர்களைப் பணியமர்த்த முயன்று வருவதாக Alberta தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு ஆட்சேர்ப்பு முயற்சிகளில் இது மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என Alberta தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

48 மணி நேர காலக்கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு எண்ணிக்கையை முடிக்க அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என் Alberta தேர்தல் திணைக்களம் திங்கட்கிழமை (08) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

10 கேள்விகள் கொண்ட October பொது வாக்கெடுப்புக்காக, Alberta  தேர்தல் திணைக்களம் 45 மில்லியன் வாக்குச்சீட்டுகளை அச்சிடுகிறது.

2023 மாகாண தேர்தலில் 18 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

1995-ஆம் ஆண்டு Quebec பொது வாக்கெடுப்பில் 48 லட்சம் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பதற்கும் 57,000 தேர்தல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த  Alberta தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு October 13 முதல் 17 வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க Donald Trump மீண்டும் வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment