தேசியம்
செய்திகள்

21 வார இடைவேளைக்கு ஒத்திவைக்கப்படும் Ontario சட்டமன்றம்

Ontario மாகாண சபை அமர்வுகள் நீண்ட கோடை விடுமுறையை ஆரம்பித்தது.

முதல்வர் Doug Ford சட்டமன்றத்தை முன்கூட்டியே மூடி, அதன் கோடைக்கால விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளார்.

Doug Ford அரசாங்கம் 102 நாள் கோடை விடுமுறையை செவ்வாய்கிழமை (02) ஆரம்பித்தது.

குறுகிய கால அமர்வை தொடர்ந்து, சட்டமன்றம் 21 வார இடைவேளைக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

சட்டமன்றம் 102 நாள் கோடைக்கால விடுமுறையை செவ்வாயன்று ஆரம்பிக்கும் எனவும் October 27 வரை மீண்டும் சபை அமர்வுகள் கூடாது எனவும் Doug Ford அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நகரசபை தேர்தலில் பின்னர் சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது.

14 வார குளிர்கால விடுமுறைக்குப் பின்னர், சட்டமன்றம் 30 நாட்கள் கூடியதை தொடர்ந்து இந்த நீட்டிக்கப்பட்ட கோடைக்கால விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சபை அமர்வுகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் September மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனாலும் நகர சபைத் தேர்தல்களில் மாகாணம் தலையிட விரும்பவில்லை என்பதால் தேர்தலுக்கு மறுநாள் சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் என அரசாங்க அவைத் தலைவர் Steve Clark விளக்கினார்.

இந்த முடிவை பிரதான எதிர்க்கட்சியான NDP கடுமையாக விமர்சித்துள்ளது.

Doug Ford அரசாங்கத்தின் கீழ், சட்டமன்றத்தில் சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவதற்கு, விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் தலைவர்கள் செலவிடும் நேரம் குறைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

Doug Ford அரசாங்கம் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க இது ஒரு வழி என அவர்கள் நம்புகின்றனர்.

சட்டமன்றம் நீண்ட காலம் முடங்கிக் கிடப்பது தவறான செய்தியை வெளிப்படுத்துகிறது என NDP தலைவர் Marit Stiles கூறினார்.

இது தவறு என கூறிய Liberal கட்சியின் இடைக்காலத் தலைவர் John Fraser, அரசாங்கம் இதைச் செய்வதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சட்டமன்றம் அமர்வுகளை நடத்துவது நகராட்சித் தேர்தல்களில் எந்த வகையிலும்  தலையிடாது என பசுமைக் கட்சி தலைவர் Mike Schreiner கூறினார்.

Doug Ford அரசாங்கம் நகராட்சி விடயங்களில் “எப்போதும்” தலையிட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

Lankathas Pathmanathan

மத்திய அரசின் பற்றாக்குறை $13 பில்லியன்!

Lankathas Pathmanathan

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment