தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (வியாழக்கிழமை) பின் வரும் விடயங்களை அறிவித்தார்:

கனடாவின் கோவிட் – 19 அவசர நடவடிக்கைத் திட்டத்திற்கு அரச ஒப்புதல் வழங்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், கனடியர்களுக்குத் தேவைப்படும் பின்வருவன போன்ற பல உடனடியான உதவிகள் கிடைக்கும்:

நேற்று அறிவிக்கப்பட்ட கனடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவின் (Canadian Emergency Response Benefit (CERB)) மூலம், கோவிட் – 19 காரணமாக வருமானம் கிடைக்காதுள்ள பணியாளர்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாத மொன்றுக்கு 2,000 டொலர் வீதம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையப் பக்கம் இயலுமான விரைவில் அமைக்கப்பட்டு, அவை சமர்ப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள் மக்களுக்குப் பணம் கிடைக்கும்

(CERB ஐப் பெறுவதற்கான தகுதி குறித்து அமைச்சர் கார்ளாகுவள்ட்றோ (Carla Qualtrough) வழங்கிய மேலதிக தகவல்கள் கீழே இடம் பெற்றுள்ளன)

மே மாதத்தில் அதிகரித்த கனடா சிறுவர் நலக் கொடுப்பனவு. குறைந்த வருமானம் பெறும் கனேடியர்களுக்கு மேலதிகமான ஜீஎஸ்ரி மீளளிப்பு

கனடா மாணவர் கடன்கள், வட்டியின்றி ஆறு மாத காலத்திற்கு இடை நிறுத்திவைக்கப்படும்.

  • கனடிய அரசு அறிவித்த புதிய உதவிகள் குறித்த முழுமையான விபரங்கள் Canada.ca என்ற அரசின் இணையத் தளத்தில் உள்ளன.
  • அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு குறித்துத் தவறான தகவலைப் பரப்பும் குறுஞ் செய்தி மோசடி ஒன்று அண்மையில் இடம் பெற்றுள்ளது. கனேடியர்கள் Canada.ca போன்ற சரியான மூலங்களில் இடங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வது முக்கியமானது.
  • கனடியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரும் விடயத்தில், எல்சல்வடோர், குவாத்தமாலா ஆகிய நாடுகளில் இருந்து மேலும் இரண்டு விமானங்கள் கனடாவருமென நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நெருக்கடியை எதிர் கொள்ளும் சர்வதேச பங்காளிகளுடன் கனடிய அரசு தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்கிறது.
  • பிரதமர் Justin Trudeau , இன்று காலையில் G-20 நாடுகளின் தலைவர்களுடன் உரையாடிய போது, கோவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவையென்பதும், தேவையான அனைத்தையும் செய்வதற்கு அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டு மென்பதும் தெளிவாகத் தெரிவதாகக் கூறினார்:

இதற்கு உலக சுகாதார நிறுவனத்துக்கும், பொதுச் சுகாதார அமைப்புக்களுக்கும் தேவையான வளங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பு மருந்தொன்றைக் கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சைகளை அடையாளம் காண்பதற்கும், சோதனைகளை அதிகரிப்பதற்கும் சேர்ந்து செயற்படுவது, இன்றியமையாத மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்வதற்கான வல்லமையை அதிகரித்தல், இத்தகைய கருவிகள் தேவைப்படுவோரைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக விநியோக வழிகள் செயற்படுவதை உறுதி செய்தல், தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்காகக் கனடாவில் உள்ள நிறுவனங்கள் அவற்றின் தொழிற்சாலைகளை மாற்றியமைப்பதற்கு உதவியளித்தல், பொருளாதார ரீதியில், இந்தச் சவாலான நேரத்தை எதிர்கொள்வதற்கு மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் கணிசமான நிதியை ஜீ-20 அமைப்பு அறிவித்துள்ளது.

  • ஐக்கிய அமெரிக்காவுக்கான கனடாவின் புதிய தூதுவராக கேர்ஸ் ரென்ஹில் மன் (Kirsten Hillman) நியமிக்கப்பட்டுள்ளார். NAFTA பேரம் பேசலின் போது கனடியர்களுக்கு நன்மையளிக்கும் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அவர் முக்கிய காரணியாக விளங்கினார். கனடாவின் வணிகம் தொடர்வதற்கு அனுமதிக்கும் வகையில் எல்லையைத் தற்காலிகமாக மூடும் விடயத்தில் தூதுவர் ஹில் மன் ஐக்கிய அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்பட்டு முக்கிய பங்காற்றினார்.
  • உடன் மரக்கறிகள், மருந்து, மருத்துவ வலையமைப்புக்குத் தேவையான பொருட்கள் போன்றவற்றை விநியோகிப்பதற்குத் தேவையான வழங்கல் வலையமைப்புக்களைப் பாதுகாப்பது கோவிட் – 19இற்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமானது. கனடிய துறை முகங்கள், தொடருந்துச் சேவைகள், பார ஊர்தித் தொழிற் துறை போன்றவற்றின் பணியாளர்கள் இந்த வேளையில் ஆற்றும் பணிக்குப் பிரதமர் நன்றிகளைத் தெரிவித்தார்.
  • மாறி வரும் நெருக்கடிக்கு ஏற்றவாறாகக் கனேடியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கனேடிய அரசு எடுக்கும். கனடா  திரும்பி வரும் பயணிகளில் பலர் நாடு திரும்பியதும் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாதிருக்கும் நிலையில், அதற்கேற்ற மேலும் கடுமையான நடடிக்கைகளைக் கனேடிய அரசு எடுக்கவுள்ளது. கனடா திரும்பும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்கு மருத்துவ தனிமைப்படுத்தலை (quarantine) மேற்கொள்ள வேண்டியது கட்டாயமென நேற்று அறிவிக்கப்பட்டது. கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான அபராதங்களும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
  • மருத்துவ கருவிகள், தனி நபர் பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகக் கவலை வெளியிடப்பட்ட நிலையில், மாகாணங்களினதும், பிராந்தியங்களினதும் தேவைகள் நிறைவு செய்யப்படுவதாகப் பிரதமர் உறுதியளித்தார் மேலும் பல மில்லியன் உபகரணங்கள் கனடாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. மேலும் அதிகமானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கனடிய அரசு உள்ளுர் நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்படுகிறது. கோவிட்-19 உலகளாவிய நெருக்கடியெனவும், அதற்கு உலகளாவிய பதில் நடவடிக்கை தேவையெனவும் வலியுறுத்திய அவர், இத்தகைய நிலையில் மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கு நேச சக்திகளுடன் நெருக்கமாகச் சேர்ந்து செயற்பட வேண்டியது முக்கியமான தெனவும் கூறினார். சமஷ்டி அமைச்சர் கார்ளாகுவள்ட்றோவின் (Carla Qualtrough) கீழ் செயற்படும் கனேடிய வேலை வாய்ப்பும், சமூக அபிவிருத்தியும் திணைக்களம் (Employment and Social Development Canada) புதிதாக உருவாக்கப்பட்ட கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைப் (Canadian Emergency Response Benefit (CERB)) பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் ஆகக் குறைந்தது 15வயதையுடைய பணியாளர்களுக்கு, அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு கிடைக்கும்:

  • வேலைவாய்ப்பு, சுயதொழில், வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவு, கர்ப்பகால கொடுப்பனவு, மகப் பேற்றுக் கால கொடுப்பனவு ஆகியவற்றில் ஒன்றின் மூலமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை மூலமோ, அல்லது குபெக்கில்குபெக் பெற்றோர் காப்புறுதித் திட்டத்திற்கு (Quebec Parental Insurance Plan (QPIP)) அமைவான இதைப் போன்ற கொடுப்பனவுகள் மூலமாகவோ, அல்லது அனைத்தையும் சேர்த்தோ 2019ஆம் ஆண்டில் மொத்தமாக ஆகக் குறைந்தது 5,000 டொலரை வருமானமாகப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,
  • நான்கு வார காலப் பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் கோவிட்-19 காரணமாக வேலை வாய்ப்பு மூலமோ, சுய தொழில் மூலமோ வருமானம் இன்றி இருக்க வேண்டும். தற்காலிகமாக வேலை செய்வதை நிறுத்தியோர், வேலை இழந்தோர், நோயுற்றோர், கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தலில் (quarantine) இருப்போர், பிள்ளையையோ, குடும்ப உறுப்பினரையோ பராமரிப்போர் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
  • இந்தப் புதிய திட்டத்தின் கீழ், சுகவீன வேலைக் காப்புறுதி (EI sickness), வழமையான வேலைக் காப்புறுதி (EI regular), அவசர பராமரிப்பு உதவி, அவசர ஆதரவுக் கொடுப்பனவு ஆகியன கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டோருக்கு, கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு என்ற ஒரே கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளன.
  • வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவுக்குத் தகுதி பெறுவோரும், வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவுக்குத் தகுதி பெறாதவர்களும் புதிய கொடுப்பனவைப் பெறக் கூடியதாக இருக்கும். புதிய திட்டத்தில் வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை பணம் வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவு 16 வாரங்கள் வரை வழங்கப்படும்.
  • இந்தக் கொடுப்பனவு 2020 மார்ச் 15 இல் இருந்து 2020 ஒக்ரோபர் 3வரையான காலப் பகுதியில் வழங்கப்படும்.
  • கனடா வருமான வரி முகவரகத்தின் My CRA கணக்கின் ஊடாக இந்தக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 26th

Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Thursday), as Canada continues to address the COVID-19 pandemic:

Canada’s COVID-19 Emergency Response Plan has received Royal Assent and has been implemented. This response plan makes way for many immediate supports for Canadians – such as;

  • The Canada Emergency Response Benefit (CERB), announced yesterday, which will provide $2,000 a month, for up to 4 months, to people who are not getting paid as a result of COVID-19. An application portal will launch as quickly as possible, and people should start receiving money within 10 days of applying;

(More information about the CERB eligibility has been made available by Minister Carla Qualtrough below)

*  A boosted Canada Child Benefit for families in May;

* Supplemented GST Credit for low-income Canadians;

* Six-month, interest-free moratorium on Canada Student Loans

  • A full list of the new supports is available at the government’s website: Canada.ca
  • Recently there has been a text scam spreading misinformation on the new Emergency Response

Benefit. It remains important for Canadians to remain informed from the correct sources such as Canada.ca.

  • In regards to repatriating Canadians, two more flights from El Salvador and Guatemala have been announced yesterday. The government is in constant communication with international partners who are also facing this crisis.
  • This morning, Prime Minister Justin Trudeau spoke to G20 Leaders, and reported that it is clear that to overcome COVID-19 action needs to be taken together as a global community, and to remain committed to do whatever it takes;

* including making sure the World Health Organization and public health agencies have the resources they need;

* working together to develop a vaccine, identify treatments, and increase testing;

* expanding manufacturing capacity for critical medical equipment, and working to keep the supply chains moving to get that equipment to the people who need it;

* helping companies in Canada retool their manufacturing facilities to produce the things needed

* On the economy, the G20 has also made significant investments to help people and businesses get through this challenging time.

  • Kirsten Hillman has been appointed as Canada’s new ambassador to the United States. Ambassador Hillman was instrumental in securing a good deal for Canada and for Canadians during NAFTA negotiations and more recently, Ambassador Hillman played a key role in working with the US to temporarily close the border, while keeping Canada’s trade flowing.
  • To fight COVID-19, it is important to protect the supply chains which provide us vital supplies like fresh vegetables, medicine, and supplies for our healthcare systems. The Prime Minister thanked the workers in Canandian ports, railways, and trucking industry for their role during this time.
  • As the crisis evolves, Canada will put in place the necessary measures to keep Canadians safe. In response to the fact that too many travelers are still not self-isolating upon returning to Canada, Canada is taking more stringent action. Yesterday, it was announced that it would now be mandatory for all travellers returning to Canada to be in quarantine for 14 days; a breach of the Quarantine Act could result in serious fine and even prison time.
  • In regards to concerns about medical equipment and personal protection equipment supplies in Canada, the Prime Minister reassured that the needs of the Provinces and Territories are being met; millions more of equipment are on route to Canada; and Canada is also working with local companies to produce more. He reiterated that COVID-19 is a global crisis and it demands a global response, making it important for Canada to work closely with allies to protect people and the economy.

Employment and Social Development Canada, under the oversight of federal minister Carla Qualtrough has set out the guidelines for the eligibility for the newly announced Canada Emergency Response Benefit (CERB) The CERB will be available to workers residing in Canada, who are at least 15 years old, and who:

  • Have earned at least $5,000 in 2019 or in the year prior to their application from any of a combination of the following sources: employment, self employment, Employment Insurance maternity and parental benefits, and/or similar benefits paid in Quebec under the Quebec Parental Insurance Plan (QPIP); and
  • Are without employment or self-employment income for at least 14 consecutive days in a four- week period, for reasons related to COVID-19, including if they have temporarily stopped working, lost their job, are sick or in quarantine, or need to care for a child or a family member.
  • The new system will streamline EI Sickness, EI Regular, and the Canada Emergency Care and Emergency Support Benefits into a single Canada Emergency Response Benefit for those impacted by COVID-19.
  • Both EI and non-EI eligible individuals will be able to access this new Benefit. The new Benefit will provide a flat weekly amount of $500, paid in four week instalments for up to 16 weeks.
  • This Benefit is available from March 15th, 2020 until October 3, 2020.
  • The application will be available through the My CRA account in April 2020.

Related posts

மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக பெரும் சேதம்

Lankathas Pathmanathan

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment