தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Caroline Mulroney

Doug Ford அமைச்சரவையிலிருந்து Caroline Mulroney பதவி விலகுகிறார்.

மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அடுத்த மாதம் விலகுவதாக Ontario Progressive Conservative மாகாணசபை உறுப்பினர் Caroline Mulroney அறிவித்தார்.

அடுத்த மாதம் பதவி விலக இருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட கடிதம் ஒன்றில் Caroline Mulroney தெரிவித்துள்ளார்.

கருவூல வாரியத்தின் தலைவராகவும், Francophone விவகாரங்கள் அமைச்சராகவும் பணியாற்றும் அவர் பதவி விலகும் முடிவு குறித்து ஞாயிற்றுக்கிழமை (24)   முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாகவும், June 5 அதிகாரப்பூர்வமாக பதவி விலகுவதாகவும் கூறினார்.

York-Simcoe தொகுதியின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினராகவும், கடந்த எட்டு ஆண்டுகளாக Ontario அரசாங்கத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்ட அவர், பதவி விலகும் முடிவு சாதாரணமாக எடுத்த முடிவு அல்ல எனவும் கூறினார்.

2018-ல்  York-Simcoe  தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட Caroline Mulroney கனடாவின் முன்னாள் பிரதமர் Brian Mulroney-யின் மகள் ஆவார்.

பதவி விலகல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக முதல்வரின் Etobicoke இல்லத்திற்கு Caroline Mulroney நேரடியாக சென்றதாக Doug Ford செய்தியாளர் சந்திப்பில் திங்கட்கிழமை (25) தெரிவித்தார்.

Caroline Mulroney பதவி விலகும் போது, ​​Ontario நிதி அமைச்சர் Peter Bethlenfavly “இடைக்கால அடிப்படையில்” கருவூல வாரியத் தலைவராக பொறுப்பேற்பார் என Doug Ford உறுதிப்படுத்தினார்.

இந்தப் பதவி விலகல் York-Simcoe தொகுதியில் ஒரு இடைத்தேர்தலை தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Gaya Raja

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

Lankathas Pathmanathan

Leave a Comment