தேசியம்
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’: Mark Carney

Alberta பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’ என பிரதமர் Mark Carney குறிப்பிட்டார்.

இந்த பொது வாக்கெடுப்பை Brexit உடன் அவர் ஒப்பிட்டார்.

பல Alberta மக்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில் வாக்களிக்க நினைத்தால், பிரிவினை குறித்த Alberta பொது வாக்கெடுப்பு கேள்வி ஒரு ஆபத்தான போக்காக மாறக்கூடும் என Mark Carney குறிப்பிட்டார்.

இது மிகவும் ஆபத்தான மிரட்டல் என மேலும் கூறிய பிரதமர், Brexit சமயத்தில் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக இருந்த தனது கால அனுபவத்தை சுட்டிக்காட்டினார்.

பத்து வருடங்கள் கழிந்த பின்னரும், தாங்கள் வாக்களிக்கவில்லை என நினைத்த ஒன்றை மக்கள் இன்னும் மாற்ற முயற்சிக்கிறார்கள் என் Brexit குறித்து Mark Carney மேலும் கூறினார்.
Alberta பிரிவினை குறித்த விவாதம் கடந்த வாரம் சூடுபிடித்தது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட October 19  பொது வாக்கெடுப்பில் Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து செல்வது குறித்த ஒரு கேள்வி இணைக்கப்படும் என முதல்வர் Danielle Smith அறிவித்தார்.

இந்த பொதுவாக்கெடுப்பு கேள்வி கனடாவின் Clarity சட்டத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை மத்திய அரசு முறையான ஆய்வு செய்து வருவதாக பிரதமர் கூறினார்.

இதில் கனடிய ஒற்றுமைக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக கூறிய Mark Carney, பிரதமராக தனது பங்கு கூட்டாட்சி முறையை ஆதரிப்பது என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

Alberta கனடாவுடன் இணைந்திருப்பதால் ஏற்படும் பொருளாதார, சமூக நன்மைகளையும் Mark Carney சுட்டிக்காட்டினார்.

Related posts

Ontario எல்லையில் உள்ள Quebec மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Quebecகின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September 1 ஆம் திகதி ஆரம்பம்!

Gaya Raja

Leave a Comment