தேசியம்
செய்திகள்

Quebecகின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September 1 ஆம் திகதி ஆரம்பம்!

Quebec மாகாணத்தின் COVID தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் September மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது .

மாகாண சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை இதனை அறிவித்தார்.

தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியிலும் நான்காவது அலை குறித்த அச்சத்தின் மத்தியிலும், மாகாணத்தின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தின் விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்.

மாகாணம் முழுவதும் உடல் பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், விழாக்கள், நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் இந்த கடவுச்சீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தடுப்பூசிக் கடவுச்சீட்டு அத்தியாவசியமற்ற சேவைகளை அணுக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆனாலும் சில்லறை கடைகளுக்கு இது தேவையில்லை என அமைச்சர் Dubé அறிவித்தார்.

இதேவேளை போலியான தடுப்பூசி கடவுச்சீட்டைப் பெறுவதற்கான முயற்சி குறித்த செய்தியும் Quebecகில் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி பெறாமல் போலியான தடுப்பூசி கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒருவர், தடுப்பூசி சுகாதாரப் பணியாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் குறித்தும் Montreal சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan

வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!