தேசியம்
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கனடா பரிசீலிக்க வேண்டும் – Erin O’Toole வலியுறுத்தல்!

2022 Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து பரிசீலிக்குமாறு Conservative கட்சி தலைவர் Erin O’Toole அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை சீன நீதிமன்றம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியருக்கு மரண தண்டனையை உறுதி செய்த நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் திங்கள் இரவு கனேடியரான Robert Schellenberg என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அவருக்கு 15 ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் மறு விசாரணைக்குப் பிறகு அது 2019 Januaryஇல் இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கனடா ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என O’Toole வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் Xinjiang பிராந்தியத்தில் உய்குர் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பிரச்சாரத்திற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் O’Toole சுட்டிக்காட்டினார்.

Related posts

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

2022 வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை $52.8 பில்லியன்

Leave a Comment

error: Alert: Content is protected !!