தேசியம்
செய்திகள்

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது Chinguacousy பூங்கா

Brampton நகர Chinguacousy பூங்கா Peel பிராந்திய காவல்துறையினரால் மூடப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (18) நிகழ்ந்தது.

Chinguacousy பூங்கா வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்காவை காவல்துறையினர் மூடிய சம்பவம் திங்கள் மாலை நிகழ்ந்தது.

பாதுகாப்பற்ற கூட்டங்கள், பரவலான பட்டாசு பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை Peel பிராந்திய காவல்துறை முன்வைத்த அடுத்து, Victoria தினத்தன்று Chinguacousy பூங்கா மக்கள் பொதுப் பாவனைக்கு மூடப்பட்டது.

பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்ததோடு, அவர்களில் சிலர் ஒருவரையொருவர் நோக்கி பட்டாசுகளை வெடித்ததாக கூறப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியைச் சோதனையிட்டு 13 பேர் மீது குற்றச் சாட்டுகளை பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் 18 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் 17 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டுகள் பதிவானதாகும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அங்கிருந்த அனைவரும் பூங்காவை விட்டு வெளியேறுமாறு மாலை 7:30 மணியளவில் காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதேவேளை Toronto நகர Ashbridges Bay வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 5 பேர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Related posts

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Conservative கட்சியில் இணைய விரும்பும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

Dominican குடியரசு பேருந்து விபத்தில் கனடியர்கள் சிக்கினர்?

Lankathas Pathmanathan

Leave a Comment