தேசியம்
செய்திகள்

Victoria Day வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 5 பேர் கைது

Toronto நகர Ashbridges Bay வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Victoria தின வாண வேடிக்கை நிகழ்ச்சியின் போது, திங்கட்கிழமை (18) ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.

பட்டாசுகள் தொடர்புடைய  குற்றச்சாட்டுகளை ஓர் இளைஞர், 20 வயதான  ஒருவர் எதிர்கொள்கின்றனர்.

இவர்கள் மீது ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர வேறு சில சம்பவங்களில் நடந்த திருட்டு, தாக்குதல் குற்றங்களுக்காக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Toronto நகரம் ஒவ்வொரு ஆண்டும் Ashbridges Bay பூங்காவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை Brampton நகர Chinguacousy பூங்கா வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

ஈரானிய அதிகாரிகள் சிலர் கனடாவுக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்?- விசாரணை நடத்தும் CBSA!

Lankathas Pathmanathan

மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் $1 மில்லியன் வெற்றி!

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

Leave a Comment