தேசியம்
செய்திகள்

உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பாக ஊடக சந்திப்பு

உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பாக ஊடக சந்திப்பு  ஒன்று Toronto நகரில் இந்த வார நடைபெற்றது.

எதிர்வரும் October மாதம் Toronto-வில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு புதன்கிழமை (06) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு அறிஞர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு October 15 முதல் 18 வரை கனடாவின் Toronto நகரில் நடைபெறவுள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சமூக முன்னோடிகள் கலந்து கொண்டு தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், செய்யறிவு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் முன்னெடுக்க உள்ளனர்.

புதன் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மாநாட்டின் முக்கிய அம்சங்கள், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு நடைமுறைகள், உலகத் தமிழர் பங்களிப்பு, இளம் தலைமுறையினரின் ஈடுபாட்டின் அவசியம் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு இருவழி விமான செலவும் தங்குமிட வசதியும் வழங்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கங்களை May 25 – ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கலாம் எனவும், அனைத்து கட்டுரைகளும் நிபுணர் குழுவினரால் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Related posts

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

Lankathas Pathmanathan

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment