தேசியம்
செய்திகள்

கனடாவுடனான வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை: Mark Carney

கனடாவுடனான தடையற்ற வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் கனடாவுக்கு வர்த்தக ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த கேள்விகளுக்கு புதன்கிழமை (22) காலை செய்தியாளர்களிடம் பதிலளித்த போது பிரதமர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அமெரிக்கா ‘வர்த்தகச் சிக்கல்கள்’ என குறிப்பிடும் விடயங்கள் குறித்து கனடியக் குழு அறிந்திருப்பதாகவும், “எங்கள் தரப்பிலும் அத்தகைய சில சிக்கல்கள் உள்ளன” எனவும் Mark Carney கூறினார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஒரு விரிவான அணுகுமுறையுடன் இந்தச் சவால்களை தீர்க்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்வரும் கோடை காலத்தில் நடைபெற இருக்கும் முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை Mark Carney செவ்வாய்கிழமை (21) அறிவித்த நிலையில் இந்த புதிய கருத்து வெளியானது.

Related posts

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

முற்றுகை போராட்டத்தினால் கனடிய பொருளாதாரத்திற்கு பல பில்லியன் டொலர்கள் நஷ்டம்

Lankathas Pathmanathan

Edmonton விபத்தில் 2 பேர் மரணம் – 6 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment