தேசியம்
செய்திகள்

பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: Pierre Poilievre

பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

பிரதமர் Mark Carney-க்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்த மூன்று இடைத் தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த போதிலும் பதவி விலகும் எண்ணம் இல்லை என Pierre Poilievre கூறினார்.

2025 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், மூன்று தொகுதிகளிலும் Conservative கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது.

University-Rosedale தொகுதியில் Conservative வேட்பாளர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

Scarborough தென்மேற்குத் தொகுதியில், Conservative கட்சி 2025-ஆம் ஆண்டை விட 12.2 சதவீதம் குறைவான ஆதரவைப் பெற்றது.

University-Rosedale தொகுதியில் Conservative கட்சியின் ஆதரவு 11.1 சதவீதம் குறைந்தது.

உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட Quebec மாகாணத்தின் Terrebonne தொகுதியில், Conservative கட்சி 2025-ஆம் ஆண்டு பெற்ற 18.2 சதவீத வாக்குகளிலிருந்து, இடைத் தேர்தலில் 3.3 சதவீதமாகச் சரிந்தது.

இந்த நிலையில் கனடியர்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என Pierre Poilievre நாடாளுமன்றத்தில் உறுதி பூண்டார்.

சபையிலும், நாடு முழுவதிலும், அடுத்த தேர்தலிலும் அந்தப் போராட்டத்தை நான் தொடர்ந்து முன்னின்று வழிநடத்துவேன் என கூறியதன் மூலம் பதவி விலகும் எண்ணம் இல்லை என அவர் வலியுறுத்தினார்.

Related posts

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

Gaya Raja

சிறுவர்களுக்கு எதிரான குற்ற விசாரணையில் 107 பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment