September 23, 2026
தேசியம்
செய்திகள்

Mark Carney பெரும்பான்மை அரசமைக்க கூடிய சாத்தியம்?

Liberal கட்சி பெரும்பான்மை அரசமைக்க கூடிய சந்தர்ப்பம் சாத்தியமாகியுள்ளது.

பிரதமர் Mark Carney பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் உள்ளார் .

இது Liberal கட்சி பல ஆண்டுகளாக எட்டாத ஒரு நிலை ஆகும்.

திங்கட்கிழமை (13) மூன்று மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது.

இதில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற பெரும்பான்மையை Liberal கட்சி பெரும் நிலை உள்ளது.

அதைத் தாண்டி கூடுதலாகக் கிடைக்கும் ஒவ்வொரு ஆசனமும், நாடாளுமன்றத்தில்  Liberal கட்சியின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.

கடந்த ஆண்டு April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து, Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 ஆசனங்கள் என்ற வரம்பை ஒட்டியே இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் தூதரகப் பதவிகளை ஏற்றுக் கொண்டு தங்கள் பதவிகளில் இருந்து விலகிய போதிலும், November மாதம் முதல் கட்சி மாறியவர்களின் தொடர்ச்சியான வருகையால் Liberal கட்சி அந்த இடைவெளியை ஈடு செய்து 171 ஆசனங்களை கொண்டுள்ளது.

இந்த நிலையில் Ontario மாகாணத்தின் Scarborough தென்மேற்கு, University-Rosedale, Quebec மாகாணத்தின் Terrebonne ஆகிய  தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்களன்று நடைபெறுகிறது.

முன்னாள் Liberal அமைச்சர்கள் இருவர் பதவி விலகியதை தொடர்ந்து, Scarborough தென்மேற்கு, University-Rosedale தொகுதி வாக்காளர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் .

இந்த இரண்டு தொகுதிகள் Liberal கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் Liberal கட்சியின் வெற்றி உறுதியாக கணிக்கப்படுகிறது.

Terrebonne தொகுதி Bloc Quebecois, Liberal கட்சிகளுக்கு இடையிலான கடுமையான போட்டியாக கருத்துக் கணிப்பாளர்களினால் கருதப்படுகிறது.

கனடாவின் உச்ச நீதிமன்றம் February மாதம் Terrebonne இந்த முடிவை இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தலில், பிரதமருக்கு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துக் கொடுக்கும் அளவிற்கு Liberal கட்சி போதுமான ஆசனங்களை வெல்ல வேண்டும் என 53 சதவீதமான கனடியர்கள் விரும்புவதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இடைத் தேர்தலின் பின்னர், நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் அவசியம் இல்லாவிட்டாலும், “கட்சி வேறுபாடுகளை கடந்து செயல்படும் உந்துதலை” அரசாங்கம் தொடரும் என Liberal கட்சியின் சபை தலைவர் Steven MacKinnon கூறினார்.

Related posts

Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Quebec வைத்தியசாலையின் அவசர பிரிவில் மூதாட்டியின் மரணம் குறித்து சுகாதார அமைச்சர் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

மேலாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்ய கனடா Post முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment