Conservative கட்சிக் குழு ஒற்றுமையாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Calgary Heritage தொகுதியின் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Shuvaloy Majumdar இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கடந்த ஐந்து மாதங்களில் நான்கு Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி Liberal அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் Conservative கட்சித் தலைவரின் நிலை குறித்தும், கட்சிக் குழுவின் ஒற்றுமை குறித்தும் பரவலாக கேள்வி எழுந்துள்ளது.

Pierre Poilievre கட்சிக்குத் தடையாக இருக்கலாம் என்ற கருத்தை  Shuvaloy Majumdar மறுத்தார்.

கடந்த January மாதம் நடைபெற்ற தனது தலைமைத்துவ மீளாய்வில் Pierre Poilievre 87.4 சதவீத ஒப்புதலைப் பெற்றிருந்தார் என அவர் சுட்டிக்காட்டினார்.

Conservative கட்சியிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறுவது அதிகரித்து வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் இடைத் தேர்தலில் பெரும்பான்மை Liberal அரசாங்கம் அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு,  Pierre Poilievre மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் அண்மைய கட்சி மாறால்களை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கடந்த தேர்தலில் கனடியர்கள் வாக்களித்ததற்கு மாறாக, Liberal  அரசாங்கம் பெரும்பான்மையை பெறுவதற்கு “மோசமான திரைமறைவு பேரங்களை” பயன்படுத்துகிறது எனவும் அவர் வாதிடுகிறார்.