கனடாவின் நீண்ட கால அரசியல்வாதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
88 வயதான Milton நகர முதல்வர் Gord Krantz அடுத்த நகரசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக புதன்கிழமை (08) அறிவித்துள்ளார்.
கனடாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல்வாதியான Gord Krantz, 1965-ல் Milton நகர மன்ற உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 1980 முதல் அந்நகரின் முதல்வராகவும் மன்றத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
Gord Krantz, 22 முறை பொதுப் பதவிக்கு வெற்றிகரமாகப் போட்டியிட்டவராவார்.
இம்முறை பல போட்டியாளர்களை எதிர்கொள்கின்ற போதிலும், October 26 அன்று மீண்டும் Milton நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்புவதாக கூறினார்.
