தேசியம்
செய்திகள்

கனடா – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?

இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

கடந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதை Dominic LeBlanc திங்கட்கிழமை (30) உறுதிப்படுத்தினார்.

வரிகளைக் குறைப்பது தொடர்பான கனடா – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என அமைச்சர் கூறினார்.

சாதகமான முறையில் முன்னேற்றம் கண்டுவந்த இரு தரப்பு பேச்சுகளை Donald Trump இடைநிறுத்தியதை Dominic LeBlanc நினைவுபடுத்தினார்.

Ontario அரசாங்கத்தின் விளம்பரம் ஒன்றினால் கோபமடைந்த Donald Trump கனடாவுடனான பேச்சுவார்த்தைகளை கடந்த October மாதம் இடை நிறுத்தி இருந்தார்.

பிரதமர் Mark Carney இந்த விளம்பரத்திற்காக Donald Trump-பிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரிய போதிலும், இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja

Liberal கட்சியிடம் இருந்து விலகி நிற்க NDP தயார்?

Lankathas Pathmanathan

Leave a Comment