தேசியம்
செய்திகள்

Winnipeg நகரசபை உறுப்பினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

Winnipeg நகரசபை உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Winnipeg நகரின் Transcona தொகுதி நகரசபை உறுப்பினர் Russ Wyatt செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு நபருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் வழங்கப்பட்டதை அடுத்து, February மாதம் முதல் தமது விசாரணை ஆரம்பித்ததாக புதன்கிழமை (25) வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.

Russ Wyatt , 2018 -ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு  பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார்.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை.

Russ Wyatt, 2002 முதல் 2018 வரை Transcona தொகுதியின் நகரசபை  உறுப்பினராக பணியாற்றினார்.

போதைப்பொருள் பழக்கத்திற்கான மறுவாழ்வு திட்டத்தில் இணைவதற்காக அவர் தனது பதவியில் இருந்து விடுப்பு எடுத்திருந்தார்.

2022 தேர்தலில் மீண்டும் Transcona நகரசபை உறுப்பினராக Russ Wyatt தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Lankathas Pathmanathan

அமைச்சரவையில் இருந்து விலகும் Pablo Rodriguez

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கில் இருந்து கனடிய அரசின் ஏற்பாட்டில் வெளியேற ஆரம்பித்துள்ள கனடியர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment