தேசியம்
செய்திகள்

புதிய NDP தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு ஆரம்பம்

புதிய NDP தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இந்த வாரம் ஆரம்பமானது.

கடந்த பொதுத் தேர்தல் தோல்வியுடன் NDP தலைமை பதவியில் இருந்து Jagmeet Singh விலகியிருந்தார்.

Jagmeet Singh தனது சொந்தத் தொகுதியில் வெற்றிபெறத் தவறி பதவி விலகினார்.

இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை ஆரம்பமானது.

Rob Ashton, Tanille Johnston, Avi Lewis, Heather McPherson, Tony McQuail ஆகிய ஐந்து வேட்பாளர்கள் அடுத்த NDP தலைவராக தேர்ந்தெடுக்கும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

NDP உறுப்பினர்கள் திங்கட்கிழமை (09) முதல் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இணையம் மூலமும், அஞ்சல் மூலமாகவும் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

Winnipeg நகரில் நடைபெறும் கட்சியின் மாநாடு வரை வாக்களிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய தலைவர் March 29-ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் March 28 வரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் 100,000 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என கட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைமைப் போட்டி ஆரம்பித்த September 2025-இல் 60,000 ஆக இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, 100,000 ஆக அதிகரித்துள்ளதாக NDP கூறுகிறது.

Jagmeet Singh வெற்றி பெற்ற 2017 தலைமைப் போட்டியில், 125,000 உறுப்பினர்கள் தலைமைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

2012-ஆம் ஆண்டு தலைமைப் போட்டியில் Tom Mulcair வெற்றி பெற்றபோது, 128,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

Mark Carney பிரதமரான இரண்டு மாத கால 2025 தலைமைத்துவ போட்டியில் 400,000 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக Liberal கட்சி தெரிவித்தது.

Pierre Poilievre தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டா 2022 தலைமை போட்டியில் 675,000 Conservative உறுப்பினர்கள் வாக்களிக்கும் தகுதி கொண்டிருந்தனர்.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட பேரழிவுகரமான தோல்வியைத் தொடர்ந்து NDP மீண்டும் தன்னை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.

கடந்த தேர்தலில் NDP அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை இழந்தது.

ஏழு வேட்பாளர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

Nunavut தொகுதி NDP நாடாளுமன்ற உறுப்பினர் Lori Idlout செவ்வாய்க்கிழமை (10) கட்சி மாறும் முடிவை எடுத்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை ஆறாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு கனடாவில் முன் எப்போதும் இல்லாத அழிவை Fiona ஏற்படுத்தும்

Lankathas Pathmanathan

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

Leave a Comment