தேசியம்
செய்திகள்

Toronto அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா?

Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தேசிய பாதுகாப்பு சம்பவம் என கருதப்படுகிறது.

Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக Toronto நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.

RCMP இந்த விசாரணையில் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு தேசிய பாதுகாப்பு சம்பவமாக கருதப்படுவதாக RCMP Ontario-வின் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரியான Chris Leather கூறினார்.

இந்த சம்பவம் குறித்து FBI அதிகாரிகள் உட்பட, மத்திய, அமெரிக்க பாதுகாப்பு பிரிவினருடன் தகவல்கள் பகிரப்படுவதாக அவர் கூறினார்.

CSIS இந்த சம்பவத்தை மிக அவதானமாக கண்காணித்து வருவதாகவும் Chris Leather தெரிவித்தார்.

இதில் பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் மக்கள் இருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

ஆனாலும் இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதில் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்.

இதில் தொடர்புபட்டதாக நம்பப்படும் சந்தேகத்திற்குரிய வெள்ளை நிற Honda CRV வாகனத்தின் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.

இந்த வாகனத்தை யாராவது அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையில் அதன் படத்தை வெளியிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

செவ்வாய் காலை சம்பவ இடத்தில் பல காவல்துறை வாகனங்கள், தடயவியல் அதிகாரிகள் ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

இது போன்ற சம்பவங்களை Toronto காவல்துறை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என Toronto காவல்துறை துணைத் தலைவர் Frank Barredo கூறினார்

இந்த விசாரணை குறித்து கருத்துத் தெரிவிக்க அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக Toronto-விலும், தலைநகர் Ottawa-விலும் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

வார இறுதியிலும் கடந்த வாரத்திலும் GTA ஜெப ஆலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூடுகளை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு!

Related posts

தமிழ் இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமர் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்

அரசாங்கம் நாட்டை நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment