தேசியம்
செய்திகள்

எட்டு Ontario பாடசாலை வாரியங்கள் மாகாண அரசின் கட்டுப்பாட்டில்!

York பிராந்திய கத்தோலிக்க பாடசாலை வாரியத்தையும் Ontario மாகாண அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

Peel மாவட்ட பாடசாலை வாரியத்தை தொடர்ந்து York பிராந்திய கத்தோலிக்க பாடசாலை வாரியத்தை Ontario அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் Peel மாவட்ட பாடசாலை வாரியம் (PDSB), York பிராந்திய கத்தோலிக்க பாடசாலை வாரியம் (YCDSB) ஆகியவற்றை இரண்டையும் இயக்குவதற்கு மேற்பார்வையாளர்களை Ontario மாகாண கல்வி அமைச்சர் நியமித்துள்ளார்.

இந்த இரண்டு பாடசாலை வாரியங்களும் தாங்களாகவே தீர்க்க முடியாத கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர் என அமைச்சர் Paul Calandra தனது முடிவை அறிவிக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

சிறந்த நிர்வாகத்தை மீட்டெடுக்கவும், ஒவ்வொரு முடிவும் மாணவர்களின் வெற்றியை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் மேற்பார்வையாளர்களை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Peel மாவட்ட பாடசாலை வாரியத்தை தற்காலிக அடிப்படையில் கையகப்படுத்துவதாக அரசாங்கம் கடந்த January மாதம் அறிவித்திருந்தது.

York பிராந்திய கத்தோலிக்க பாடசாலை வாரியம் அடுத்ததாக கையகப்படுத்தப்படலாம் என அரசாங்கம் அந்நேரம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் PDSB மேற்பார்வையாளராக மேலாண்மை ஆலோசகர் Heather Watt நியமிக்கப்பட்டுள்ளார்.

YCDSB பொறுப்பாளராக Carrie Kormos நியமிக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் எட்டு Ontario பாடசாலை வாரியங்கள் இப்போது மாகாண ரீதியாக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களால் நடத்தப்படுகின்றன.

பாடசாலை வாரியங்களை கல்வி அமைச்சர் எளிதாகக் கைப்பற்ற வழிவகுக்கும் சட்டத்தை கடந்த இலையுதிர் காலத்தில் அரசாங்கம் இயற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன!

Lankathas Pathmanathan

அமெரிக்காவிற்கான மின்சார ஏற்றுமதிக்கு Ontario 25 சதவீதம் வரி அறிவித்தது!

Lankathas Pathmanathan

Ontarioவில் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பனிப்புயல்

Lankathas Pathmanathan

Leave a Comment