தேசியம்
செய்திகள்

பெரும் சக்திகளுக்கு இடையே போட்டி நிலவும் உலகில், நடுத்தர சக்திகளுக்கு ஒரு தேர்வு உள்ளது: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Mark Carney

முக்கியமான கனிமங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.

ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Mark Carney இந்த ஒப்பந்தம் குறித்து கூறினார்.

புதன்கிழமை (04) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கனடிய பிரதமர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.

“நடுத்தர சக்திகளுக்கு” இடையே வளரும் பிணைப்பின் அடையாளமாக இந்த உரை அமைந்தது.

ஆசிய-பசிபிக் பிராந்திய பயணத்தை Mark Carney மேற்கொண்டுள்ளார்.

2007-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒரு கனடிய பிரதமர் உரையாற்றிய முதல் நிகழ்ச்சியும் அவரது ஆஸ்திரேலிய பயணத்தில் அடங்கியது.

பெரும் சக்திகளுக்கு இடையே போட்டி நிலவும் உலகில், ஆதரவுக்காக போட்டியிடுவது அல்லது பலத்திற்காக ஒன்றிணைவது” என நடுத்தர சக்திகளுக்கு ஒரு தேர்வு உள்ளது என ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் Mark Carney கூறினார்.

நாடாளுமன்றத்தில் கனடிய பிரதமரை அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese, அவரது உரை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தை பிரதிபலிப்பதாக கூறினார்.

பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆஸ்திரேலியாவும் கனடாவும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Related posts

Quebec சட்டமன்றத்தில் இருந்து அதிக எண்ணிக்கை பெண்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்ற பிரதான கட்சிகளுக்கு இடையில் இணக்கம்?

Lankathas Pathmanathan

Leave a Comment