தேசியம்
செய்திகள்

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடா அதிக செல்வாக்கை உருவாக்க வேண்டிதன் அவசியத்தை Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.

Toronto-வில் உள்ள கனடாவின் பொருளாதார கழகத்தில் வியாழக்கிழமை (26) ஆற்றிய உரையில் Pierre Poilievre இந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் இருந்தாலும், கனடா அமெரிக்காவிற்கு பதிலாக சீனாவை மாற்றக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.

வெளிநாடுகளில் செல்வாக்கை அதிகரிக்க உள்நாட்டில் வலுவாக மாறுவதை மையமாகக் கொண்ட இந்த உரையில், கனடா-அமெரிக்க உறவுகளுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை Pierre Poilievre முன்வைத்தார்.

“நாம் எதைக் கட்டுப்படுத்துகிறோம், எதைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும்” னக் கூறி அவர், “மற்றவர்கள் எம்மைக் கட்டுப்படுத்த நாம் அனுமதிக்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

Related posts

புதன்கிழமை மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்வு

Lankathas Pathmanathan

Brussels பயணமானார் கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Stratford துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment