September 27, 2026
தேசியம்
செய்திகள்

Lebanon கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் பணியில் உள்ளனர்

ஈரானில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் மத்தியில், கனடிய தூதரக ஊழியர்கள் தொடர்ந்தும் Lebanon-னில் இருப்பதாக கனடிய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Lebanon தலைநகரில் இருந்து அத்தியாவசியமற்ற ஊழியர்களை அமெரிக்கா மீள அளித்துள்ள நிலையிலும் கனடிய தூதரக ஊழியர்கள் அங்கு தொடர்ந்தும் கடமையில் உள்ளதாக கனடிய விவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Beirut-டில் உள்ள கனடா தூதரகம் வழமை போல் செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்திய கனடிய வெளிவிவகார அமைச்சு, கனடியர்களுக்கு தூதரக ஆதரவு உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்க கனடிய ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர் எனவும் கூறியது.

உள்ளூர் நிலைமைகளை அவதானித்து வருவதாக கூறும் கனடிய வெளிவிவகார அமைச்சு, கனடாவின் இராஜதந்திர ஊழியர்கள், அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு எப்போதும் கனடா அரசாங்கத்திற்கு முன்னுரிமையாக இருந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

Related posts

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில்?

Lankathas Pathmanathan

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

Lankathas Pathmanathan

P.C. மாகாண சபை குழுவில் இருந்து MPP விலக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment