September 15, 2026
தேசியம்
செய்திகள்

Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட் டார்?

NATO நாடாளுமன்றக் கூட்டத்திற்காகச் சென்றிருந்தபோது, தான் தாக்கப்பட்டதாக Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

Brussels நகரில் நடைபெற்ற NATO நாடாளுமன்றக் கூட்டத்தில் Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Simon-Pierre Savard-Tremblay பங்கேற்றிருந்தார்.

அங்கு சென்றிருந்தபோது, தான் தாக்கப்பட்டதாக Simon-Pierre Savard-Tremblay தெரிவித்தார்.

இந்த வாரம் செவ்வாய்கிழமை (17) தாக்கப்பட்ட தன்னிடமிருந்து கடிகாரம் திருடப்பட்டதை Saint-Hyacinthe-Bagot-Acton தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Simon-Pierre Savard-Tremblay கூறினார்.

இதில் தனக்கு காயம் ஏற்படவில்லை என கூறும் அவர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது கனடியர்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்க அவர் வலியுறுத்துகிறார்.

மூவரால் தாக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும் அவர் கூறினார்.

Brussels -சில் கனடிய தூதரகத்திலும், கனடிய நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவினரிடமும் இந்த சம்பவம் குறித்து அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

Related posts

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Freedom Convoy போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment