தேசியம்
செய்திகள்

புதிய தலைமை பொது சுகாதார அதிகாரி நியமனம்

கனடாவின் புதிய தலைமை பொது சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டார்.

Manitoba மாகாணத்தை சேர்ந்த மருத்துவர் Joss Reimer, கனடாவின் புதிய தலைமை பொது சுகாதார அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

எதிர்வரும் இலைதுளிர் காலத்தில் அவர் இந்தப் பதவியை ஏற்க உள்ளார் என வெள்ளிக்கிழமை (20) அறிவிக்கப்பட்டது.

கனடாவின் புதிய தலைமை பொது சுகாதார அதிகாரி பதவி வெற்றிடமாகி சுமார் எட்டு மாதங்களுக்கு பின்னர் இந்த நியமனம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

எட்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்து கடந்த June மாதம் ஓய்வு பெற்ற வைத்தியர் Theresa Tam-க்குப் பதிலாக Joss Reimer நியமிக்கப்படுகிறார்.

தனது மூன்று ஆண்டு பதவிக் காலத்தை Joss Reimer April 1-ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளார்.

ஒரு முக்கியமான நேரத்தில் பொது சுகாதார பிரிவில் Joss Reimer இணைகிறார் என கனடாவின் சுகாதார அமைச்சர் Marjorie Michel இந்த நியமனத்தை உறுதிபடுத்திய ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

“பொது சுகாதார பிரிவு என்பது கனடாவில் உள்ள மக்களின், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களின் நல்வாழ்வை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முயற்சிகளை ஒன்றிணைப்பதாகும்” என Joss Reimer ஒரு ஊடக அறிக்கையில் கூறினார்.

Winnipeg சுகாதார அதிகார சபையின் தலைமை மருத்துவ அதிகாரியாக Joss Reimer இருந்தார்.

அதற்கு முன்ன்னர் அவர் Manitoba மாகாணத்தின் COVID-19 தடுப்பூசி செயல்படுத்தும் பணிக்குழுவின் மருத்துவத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு Congo பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கனடியர்களுக்கு அறிவுறுத்தல்?

Lankathas Pathmanathan

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Doug Ford பொருளாதாரச் செயல்பாடுகளை விமர்சித்த Liberal கட்சித் தலைமை போட்டியாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment