தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்துக்களுடன் உடன்படவில்லை என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான நடந்து வரும் கனடாவின் வர்த்தகப் போர் குறித்து Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Jamil Jivani அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கள் கனடாவை பாதிப்பதாக அமைந்திருந்தன.
கனடாவின் அமெரிக்க எதிர்ப்பு சீற்றம் தொடர்ந்தால், நம்மை நாமே பாதிப்புக்குஉள்ளாக்குகிறோம் எனJamil Jivani தெரிவித்தார்.
இந்த நிலையில் Jamil Jivani முன்வைக்கும் கருத்து தனிப்பட்ட கருத்துக்கள் என கூறிய Pierre Poilievre, தனது கருத்துக்களே கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து எனவும் தெளிவுபடுத்தினார்.
இந்த மாத ஆரம்பத்தில் Jamil Jivani மூத்த அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க ஒரு இராஜதந்திர பயணமாக Washington பணித்திருந்தார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் நீண்டகால நண்பரான அவர் இந்தப் பயணத்தையும் அங்கு நிகழ்ந்த உரையாடல்களையும் பயனுள்ளவை எனக் கூறினார்.
கனடாவும் அமெரிக்காவும் ஒரு வருடத்திற்கும் மேலாக வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன.
கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கடுமையான வரிகளை விதித்த பின்னணியில் இந்த இருதரப்பு வர்த்தக போர் தொடர்கிறது.
கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே மறு ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் Donald Trump இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
