September 27, 2026
தேசியம்
செய்திகள்

அதிகரித்தது உணவுப் பணவீக்கம்

உணவுப் பணவீக்கம் January மாதம் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரதான பணவீக்க விகிதம் தளர்வடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (17) அறிவித்தது.

January மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதம் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 2.4 சதவீதத்தில் நிலையாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் January மாதத்தில் எரிவாயு விலைகள் 16.7 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சரிவுகள் உணவுப் பணவீக்கத்தை ஈடுகட்ட உதவியதாக் கூறப்படுகிறது.

இது ஒரு மாதத்திற்கு முன்னர் 6.2 சதவீதமாக இருந்த நிலையில், January மாதம் 7.3 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

நாடாளுமன்ற சபாநாயகரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan

Leave a Comment