தேசியம்
செய்திகள்

இரண்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Innisfil நகரில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்தனர்.

Innisfil நகரம் Torontoவிற்கு வடக்கே உள்ளது.

செவ்வாய்கிழமை (11)இரவு 8 மணியளவில் தெற்கு Simcoe காவல்துறை அதிகாரிகள் இருவர் இல்லமொன்றிக்கு இடையூறு குறித்த அழைப்பின் பேரில்  சென்றனர்.

அந்த இல்லத்தில் 23 வயதுடைய ஒருவருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணையின் பின்னர் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு அதிகாரி அவசர சிகிச்சை உதவிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இரண்டாவது அதிகாரி ஆபத்தான நிலையில் Toronto மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை (12) காலை மரணமடைந்ததாக ஒரு அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறைத் தலைவர் John Van Dyke கொல்லப்பட்ட அதிகாரிகளின் விபரங்களை புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

33 வயதான Constable Devon Northrup, 54 வயதான Morgan Russell ஆகியோர் மரணமடைந்த அதிகாரிகளாவர்.

Northrup காவல்துறையில் ஆறு வருட அனுபவம் கொண்டவர் எனவும், Russell  33 வருட சேவை அனுபவம்  கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசேட புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது.

ஆறு புலனாய்வாளர்கள், மூன்று தடயவியல் புலனாய்வாளர்கள் இந்த விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக York பிராந்திய காவல்துறையும் தமது விசாரணையை தனியே நடத்தி வருகிறது.

இரண்டு காவல்துறை அதிகாரிகளின் மரணம் குறித்து Ontario மாகாண முதல்வர் Doug Ford தனது அதிர்ச்சியை வெளியிட்டார்.

பிரதமர் Justin Trudeau, தெற்கு Simcoe காவல்துறைக்கும் மரணமடைந்த அதிகாரிகளின் அன்புக்குரியவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

ஏனைய பிராந்திய தலைவர்களும் தமது இரங்கல்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related posts

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

Lankathas Pathmanathan

Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை: Ontario அரசாங்க வழக்கறிஞர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment