தேசியம்
செய்திகள்

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Quebec மாகாணத்தில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை வரை 18 தட்டம்மை நோயாளர்கள் மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என Quebec சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலை வாரியங்கள், சேவை மையங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பாடசாலைகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

தடுப்பூசி தகவல்கள், நோயின் அறிகுறிகள், நோயின் பரவல் உள்ளிட்ட நோயின் நிலை குறித்து பெற்றோருக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது .

Related posts

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

Leave a Comment