தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது: Alberta முதல்வர்

COVID தடுப்பூசி போடாதவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என Alberta மாகாண முதல்வர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடப்படாதவர்கள் மிகவும் பாகுபாடு காட்டப்பட்ட குழுவினர் என முதல்வராக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் Danielle Smith கூறினார்.

தடுப்பூசி போடாதவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பதவியில் இருக்கும் போது செயல்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

இது பாகுபாட்டின் மிகவும் தீவிரமான நிலை என அவர் வர்ணித்தார்.

ஆனாலும் தடுப்பூசி போடப்படாதவர்கள் மீதான முதல்வரின் பார்வை, ஓரங்கட்டப்பட்ட குழுவின் மீதும் தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்த அவரது கட்சியின் மற்றொரு வழி என எதிர்கட்சி கூறுகிறது.

Albertaவில், அனைத்து முனைகளிலும் பாகுபாடு உள்ளது என NDP நீதி விமர்சகர் Irfan Sabir கூறினார்.

வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்கள் Albertaவில் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முதல்வரின் கருத்துக்கள் எங்கள் மாகாணத்தை மேலும் பிளவுபடுத்தும் எனவும் Sabir கவலை தெரிவித்தார்.

Related posts

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

Gaya Raja

ஒரு மாதத்தை அண்மிக்கும் Canada Post வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment