தேசியம்
செய்திகள்

கிரீன்லாந்தின் தலைநகரில் புதிய கனடிய தூதரகம் திறப்பு

கிரீன்லாந்தின் தலைநகரில் புதிய கனடிய தூதரகம் வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய கனடிய தூதரகம் கனடாவிலிருந்து பயணித்த Inuit பிரதிநிதிகள் குழு முன்னிலையில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து பயணம் மேற்கொண்ட 60 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கனடிய ஆளுநர் நாயகம் Mary Simon, கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், Denmark கனடியத்  தூதர் Carolyn Bennett, கனடாவின் புதிய Arctic தூதர் Virginia Mearns உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி தன்னாட்சி பெற்ற டென்மார்க் பிரதேசத்தை கையகப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்தத் தூதரகத்தை கனடா திறந்து வைத்துள்ளது.

அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தல்களை தொடர்ந்து கிரீன்லாந்தில் தூதரகத்தை திறந்த முதல் நாடுகளில் ஒன்றாக கனடா மாறியுள்ளது.

புதிய துணைத் தூதரகத்தின் முன்பாக கனடிய தேசியக் கொடியை ஏற்றிய அனிதா ஆனந்த், கனடா கிரீன்லாந்துடன் துணை நிற்கிறது என கூறினார்.

கிரீன்லாந்தில் கனடா புதிய தூதரகத்தை திறந்தது,  இரு நாடுகளுக்கு இடையிலான உறவின்  ‘புதிய ஆரம்பம்’ என டென்மார்க் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்காக அங்கு பயணம் செய்த அனிதா ஆனந்த், டென்மார்க் வெளியுறவு அமைச்சர்  Lars Loekke Rasmussen, கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சர்  Vivian Motzfeldt ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கிரீன்லாந்திற்கான கனடாவின் ஆதரவுக்கு Vivian Motzfeldt நன்றி தெரிவித்தார்.

Related posts

பிரதமரின் தனிப்பட்ட விபரங்களை பெற முயன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் RBC முன்னாள் ஊழியர்!

Lankathas Pathmanathan

மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தம்!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment