தேசியம்
செய்திகள்

Durham காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயம்!

Durham பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

Oshawa நகரில் Durham காவல்துறை அதிகாரியும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

ஆயுதத்துடன் இருக்கும் நபர் குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்ட காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

இதில் காயமடைந்த பொதுமகன் 27 வயதான ஆண் என தெரியவருகிறது.

காயமடைந்த காவல்துறை அதிகாரி குறித்து விபரங்கள் வெளியாகவில்லை.

காயமடைந்த அதிகாரியும், சந்தேக நபரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது இருவரும் நிலையான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து Ontario மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit – SIU) விசாரணை  நடத்துகிறது.

படுகாயமடைந்த Durham பிராந்திய காவல்துறை அதிகாரி விரைவில் நலம் பெற வேண்டும் என  Oshawa நாடாளுமன்ற உறுப்பினர் Rhonda Kirkland , Ontario மாகாண முதல்வர் Doug Ford ஆகியோர் தெரிவித்தார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

உலக junior hockey தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

Lankathas Pathmanathan

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகம்!

Lankathas Pathmanathan

Leave a Comment