தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

Freedom Convoy வாகனத் தொடரணி போராட்டங்களின் போது அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு Liberal அரசாங்கத்திடம் நியாயமான காரணங்கள் இருக்கவில்லை என மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறுகிறது.

இந்த முடிவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (16) அறிவித்தது.

January, February 2022 மாதங்களில் சுமார் மூன்று வாரங்களுக்கு, Ottawa-வின் மையப் பகுதி போராட்டக்காரர்களால் நிரம்பியிருந்தது.

இதில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்தை தடுத்த பெரிய Truck வாகனங்களும் அடங்கின.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடா அமெரிக்கா எல்லை கட்டுபாடுகள் எளிதாக்கப்படுவதால் குழந்தைகளுக்கு அதிகரித்த Delta மாறுபாட்டின் ஆபத்து!

Gaya Raja

Ontario அரசின் காசோலைகள் விரைவில் அனுப்பப்படும்

Lankathas Pathmanathan

Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment