September 30, 2026
தேசியம்
செய்திகள்

Venezuela: அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை

Venezuela-வுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களை மத்திய அரசு எச்சரிக்கிறது.

அதிகரித்து வரும் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி இந்த எச்சரிக்கை வெளியானது.

Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

முன்னதாக Venezuela மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்களை முன்னெடுத்த நிலையில் கனடிய அரசின் எச்சரிக்கை வெளியானது.

Venezuela-வில் தற்போதைய நிலைமை பதட்டமானது, விரைவாக மாறக்கூடியது என கனடிய மத்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் எல்லைகளும் வான்வெளியும் குறுகிய கால அறிவிப்பில் மூடப்படலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Venezuela-வுக்கான கனடிய தூதரகம் 2019-ஆம் ஆண்டு முதல் இயங்கவில்லை எனவும் அந்த பயண ஆலோசனையில் குறிப்பிடப்படுகிறது.

Venezuela-வில் உள்ள கனடியர்களுக்கு தூதரக உதவிகளை வழங்குவதற்கான எங்கள் திறன் மிகவும் குறைவாக உள்ளது எனவும் அந்த எச்சரிக்கை குறிப்பிடுகிறது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

அமெரிக்கா மீதான பதில் வரிப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்ட பொருட்கள்?

Lankathas Pathmanathan

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment