தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அவதானிக்கின்றோம் – கனடிய அரசாங்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கனடியர்களுடன் கனடிய அரசியல் தலைவர்களும் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை தானும் தனது அலுவலகமும் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரதமர் Justin Trudeau நேற்று (03) கூறினார். தேர்தல் முடிவுகள் கனடியர்களின் நலன்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதில் கவனம் செலுத்துவதாகவும் Trudeau செய்தியாளர்களிடன் தெரிவித்தார். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யாராக இருந்தாலும் கனடியர்களின் நலனுக்காக அவருடன் பொருளாதாரம், சமூகம் , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கமாக பணியாற்ற தயாராகவுள்ளதாகவும் பிரதமர் Trudeau உறுதியளித்தார்.

இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் கனடியர்களுக்கான உதவிகளை வழங்க கனடாவின் தூதர்கள் தயார் நிலையில் உள்ளனர் என துணை பிரதமர் Chrystia Freeland கூறினார். அமெரிக்கர்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் கனடியர்களின் நலன்களுக்காக சிறந்த முறையில் ஒன்றிணைந்து செயல்பட தயாராகவுள்ளதாக Conservative தலைவர் Erin O’Toole தெரிவித்தார். ஆனாலும் அமெரிக்கர்கள் யாரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க Trudeau, Freeland, O’Toole ஆகியோர் மறுத்துள்ளனர்

இதேவேளை இந்தத் தேர்தலில் Donald Trump தோல்வியடைய வேண்டும் என தாம் விரும்புவதாக NDP தலைவர் Jagmeet Singh, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet ஆகியோர் அண்மைய நாட்களில் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி

Lankathas Pathmanathan

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

Ontarioவில் தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment