September 8, 2026
தேசியம்
செய்திகள்

Venezuela மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கனடாவில்

Venezuela ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த நிலையில் Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி இந்த இராணுவ நடவடிக்கையை கண்டித்தனர்.

சனிக்கிழமை பிற்பகல் கடும் குளிரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறுவதாக அங்கு போராட்டக்காரர்கள்  குரல் எழுப்பினர்.

அமைதியை வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு அமெரிக்காவின்  தலையீட்டையும் கண்டித்தனர்.

Venezuela-வில் நடக்கும் நிகழ்வுகள் ஆபத்தை குறிக்கின்றது என Toronto போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்த கனடாவின் பதில் நடவடிக்கையை பல ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்தனர்.

Venezuela-விற்கு எதிரான நீண்டகால தடைகளுக்கு கனடிய மத்திய அரசாங்கம் உடந்தையாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

வீடுகளின் விற்பனை அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் Summer McIntosh, Ethan Katzberg

Lankathas Pathmanathan

Leave a Comment