தேசியம்
செய்திகள்

Venezuela மக்களுக்கு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்திய Mark Carney

Venezuela மக்களுக்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்த கருத்து வெளியானது.

முன்னதாக Venezuela மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்களை முன்னெடுத்த நிலையில் இந்த கைது குறித்த அறிவித்தல் வெளியானது.

Venezuela குடிமக்களின் ஜனநாயக விருப்பத்தை மதிக்கும் “அமைதியான, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட,  Venezuela தலைமையிலான மாற்ற செயல்முறையை கனடா தொடர்ந்து ஆதரித்து வருகிறது” எனவும் அவர் கூறினார்.

கடந்த March மாதம் தனது தலைமையிலான கனடாவின் புதிய அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்று Nicolás Maduro-வின் மிருகத்தனமான அடக்குமுறை, குற்றவியல் ஆட்சியின் மீது மேலதிக தடைகளை விதித்ததாகும் எனவும் Mark Carney குறிப்பிட்டார்.

2018 தேர்தலை Nicolás Maduro சட்டவிரோதமாக வெற்றி பெற்றதிலிருந்து கனடா சட்டவிரோத ஆட்சியை அங்கீகரிக்கவில்லை எனவும் ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

Nicolás Maduro ஆட்சியுடன் தொடர்புடைய பல தனிநபர்களுக்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் எண்ணிக்கை 12-ஆக குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment