தேசியம்
செய்திகள்

Venezuela ஜனாதிபதி கைது: சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க கனடா வலியுறுத்தல்!

சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டிய அவசியத்தை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.

Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்த கருத்து வெளியானது.

முன்னதாக Venezuela மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்களை முன்னெடுத்த நிலையில் இந்த கைது குறித்த அறிவித்தல் வெளியானது.

இந்த நிலையில் Nicolás Maduro ஆட்சியின் எந்தவொரு சட்டபூர்வமான தன்மையையும் கனடிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என அனிதா ஆனந்த் கூறினார்.

Venezuela மக்களுக்கும், அமைதியான, ஜனநாயக சமூகத்தில் வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்திற்கும் நாங்கள் துணை நிற்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

“சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கான எங்கள் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு இணங்க, கனடா அனைத்து தரப்பினரையும் சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு அழைக்கிறது” எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

Colombia-வில் உள்ள கனடிய தூதரகம் மூலம் தூதரக சேவைகளை வழங்க கனடிய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Venezuela-வில் தூதரக சேவைகளை கனடா கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

திங்கட்கிழமை கனடாவில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின!

Gaya Raja

Leave a Comment