தமிழ் பெண் உயிரிழக்கக் காரணமான Scarborough வாகன விபத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மாதம் 5-ஆம் திகதி Markham Road & Finch Avenue East சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் 34 வயதான சிந்துஜா ஜீவராஜ் என்ற தமிழ் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இவர் பயணித்த pick-up வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்கு உள்ளானதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு மாதம் தொடர்ந்த விசாரணையின் பின்னர் வாகன ஓட்டுநர் 47 வயதான ஹரிஹரன் நவரத்தினம் என்பவரை கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர்.
அவருக்கு எதிராக மரணத்தை விளைவிக்கும் ஆபத்தான போக்குவரத்து நடவடிக்கைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக வியாழக்கிழமை (04) ஒரு செய்திக் குறிப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் விபத்தின் போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லையென அந்நேரம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் நவரத்தினதிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
