September 21, 2026
தேசியம்
செய்திகள்

பசுமை கட்சியின் துணைத் தலைவர் நியமனம்!

கனடிய பசுமை கட்சியின் துணைத் தலைவர் நியமிக்கப்பட்டார்.

Kitchener மத்திய தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Mike Morrice பசுமை கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் 2021-ஆம் ஆண்டு Kitchener மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

2025 தேர்தலில் அவர் இந்தத் தொகுதியை Conservative கட்சியின் வேட்பாளர் Kelly DeRidder-இடம் 300 வாக்குகளால் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பசுமைக் கட்சியில் விரைவில் எதிர்பார்க்கப்படும் சில தலைமை மாற்றங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

Elizabeth May அடுத்த தேர்தலில் கட்சியின் தலைவராக இருக்கப் போவதில்லை என  முன்னர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் Mike Morrice இந்தத் தலைமைப் பொறுப்பில் பணியாற்ற ஒப்புக் கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என Elizabeth May கூறினார்.

அடுத்த தேர்தலில், Kitchener மத்திய தொகுதிக்கு மீண்டும் போட்டியிடப் போவதாக Mike Morrice  கூறியுள்ளார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan

சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ள NDP மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

மூன்றாவது World Series பட்டத்தை வெற்றி பெறுமா Blue Jays?

Lankathas Pathmanathan

Leave a Comment