தேசியம்
செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்களின் இரண்டாவது பட்டியல் அறிவிப்பு

தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்களின் இரண்டாவது பட்டியலை பிரதமர் Mark Carney அறிவித்தார்.

$56 பில்லியன் டொலருக்கு அதிகமான புதிய முதலீட்டைக் குறிக்கும் இந்தத் திட்டங்கள் 68,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என பிரதமர் கூறினார்.

மூன்று பிரதான கனிமவளத் திட்டங்கள், Ontario-வில் ஒரு நிக்கல் சுரங்கம், வடக்கு British Columbia-வின் ஒரு மின்மாற்றி இணைப்பு திட்டம் ஆகியன இந்த புதிய அறிவித்தலில் அடங்குகின்றன.

ஏற்றுமதியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அமெரிக்காவின் வரியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவும் இதுபோன்ற திட்டங்கள் மிக பிரதானமானவை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த அறிவித்தல் குறித்து அரசியல் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

British Columbia-யாவை தளமாகக் கொண்ட புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக மாகாண முதல்வர் David Eby கூறினார்.

Crawford திட்டத்திற்கான ஒப்புதல்களை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசின் கவனம் வரவேற்கப்படுவதாக Ontario முதல்வரின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த விடயத்தில் Liberal அரசின் நகர்வு மிகவும் மெதுவாக இருப்பதாக Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre விமர்சித்தார்.

தேசத்தை கட்டியெழுப்பும் முதல் ஐந்து திட்டங்களை வெளியிட்ட சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், வியாழக்கிழமை (13) இந்தப் புதிய திட்டங்கள் அடங்கிய பட்டியல் பிரதமரினால் அறிவிக்கப்பட்டது.

இதற்கென 2025 வரவு செலவுத் திட்டத்தில் $214 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

Lankathas Pathmanathan

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர Alberta தயார்

Lankathas Pathmanathan

NDP உறுப்பினர்கள் சிலர் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை தவிர்க்க அனுமதிக்கப்படலாம்?

Lankathas Pathmanathan

Leave a Comment