தேசியம்
செய்திகள்

இளைஞர் வேலையற்றோர் விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

இளைஞர் வேலையற்றோர் விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இளைஞர் வேலையற்றோர் விகிதம் September மாதத்தில் 15 சதவீதத்தை எட்டியது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

COVID தொற்று நோய் காலத்தைத் தவிர்த்து, 2010 -ஆம் ஆண்டுக்கு பின்னர் இது மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

இந்த இறுக்கமான நிலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக கூறும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பு பகுப்பாய்வுத் தலைவர் Andrew Fields, இளம் கனடியர்கள் குறைந்தபட்ச ஊதிய வேலைகளைக் கூட பெறுவது கடினமாகி வருவதாக தெரிவித்தார்.

புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய அவசியமில்லை என்ற நிறுவனங்களின் சூழலில் குறிப்பாக இளைஞர்கள்  பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர் என அவர் கூறினார்.

கடந்த ஆண்டை விட தேவையான பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

Gaya Raja

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

Gaya Raja

COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment