தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிரான வரி எதிர்ப்பு விளம்பரத்தை இடைநிறுத்த Ontario அரசு முடிவு!

அமெரிக்காவுக்கு எதிரான வரி எதிர்ப்பு விளம்பரத்தை இடைநிறுத்த Ontario மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (23) ஒரு அறிக்கையில் இந்த முடிவை அறிவித்தார்.

பிரதமர் Mark Carney-யுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், திங்கட்கிழமை (27) முதல் விளம்பரங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் Doug Ford கூறினார்.

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

இந்த நிலையில் வரி எதிர்ப்பு விளம்பரத்தை இடைநிறுத்தும் முடிவை Ontario மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட Ontario அரசாங்கத்தின் புதிய விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்ளும் முடிவை Donald Trump எடுத்திருந்தார்.

இதேவேளை அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை தயாராக இருக்கும்போது, தனது  அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளனர் எனவும் Mark Carney கூறினார்.

Related posts

Ontarioவில் 7 நாட்களுக்கான COVID தொற்றின் சராசரி 700ஐ தாண்டியது!

Gaya Raja

அடுத்த மாதம் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா

Gaya Raja

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment