தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

Ontario மாகாண சபை அமர்வுகள் திங்கட்கிழமை (20)  மீண்டும் ஆரம்பித்தன.

137 நாள் இடைவெளியின் பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் திங்களன்று சபை அமர்வுக்கு திரும்பினர்.

மாறிவரும் பொருளாதார, அரசியல் நிலையின் மத்தியில் இந்த அமர்வு ஆரம்பமானது.

June 5-ஆம் திகதி சட்டமன்ற அமர்வுகள் நீண்ட விடுமுறை எடுத்த நிலையில் இருந்து Ontario மாகாணத்தின் பொருளாதார நிலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் Ontario மாகாணத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

Ontario மாகாணத்தின்  வேலையற்றோர் விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 0.8 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மாத கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்த நாடளாவிய சராசரியான 7.1 சதவீதத்தை விட அதிகமானதாகும்.

ஆனாலும் இவை Progressive Conservative முதல்வரின் ஆதரவு நிலையை பாதிக்கவில்லை என அண்மைய கருத்து  கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கோடை விடுமுறைக்கு முன்னர் இருந்ததை விட முதல்வர் Doug Ford இப்போது வலுவான அரசியல் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

September 14 -ஆம் திகதி நடைபெற்ற தலைமைத்துவ மதிப்பாய்வில் 57 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற பின்னர், Liberal கட்சி தலைவர் Bonnie Crombie பதவியில் இருந்து விலகினார்.

ஒரு வாரத்திற்கு பின்னர் NDP தலைவர் Marit Stiles தனது கட்சியின் 68 சதவீத ஆதரவை மாத்திரம் பெற்றுள்ளார்.

அண்மைய கருத்து கணிப்பில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி PCs 52 சதவீதமான மக்கள் ஆதரவையும், Liberal கட்சி 24, NDP 12, பசுமை கட்சி 6 சதவீதம் என மக்கள் ஆதரவை பெற்றுள்ளன.

கடந்த February மாதம் நடைபெற்ற தேர்தலில் 43 சதவீத மக்கள் ஆதரவுடன் Doug Ford  தொடர்ந்து மூன்றாவது பெரும்பான்மை அரசாங்கத்தை வென்றார்.

Related posts

பலமான அதிகாரங்கள் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

பயங்கரவாத நிதியுதவி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

Lankathas Pathmanathan

Leave a Comment