September 18, 2026
தேசியம்
செய்திகள்

புதிய ஆண்டுக்கான இலக்குகளை வரையறுத்துமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்?

புதிய ஆண்டுக்கான தங்கள் இலக்குகளை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை பிரதமர் Mark Carney தனது அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார்.

Liberal அரசாங்கம் அதன் முக்கிய இலக்குகளை அடைய உதவும் மூன்று முதல் ஐந்து “முக்கிய நோக்கங்களை” அடையாளம் காணுமாறு அமைச்சர்களுக்கும் வெளியுறவுச் செயலாளர்களுக்கும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

July மாத ஆரம்பத்தில் குறிப்பிட்ட கடிதம் அமைச்சர்களுக்கும் வெளியுறவுச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடவடிக்கைக்கான இந்த முன்னுரிமைகளை வரையறுத்துக் கொள்ள மூன்று வாரங்களுக்கு குறைவான கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது உள்ள வளங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி இந்த நகர்வை முன்னெடுக்குமாறு அமைச்சர்களுக்களையும் வெளியுறவுச் செயலாளர்களையும் பிரதமர் கோரினர்.

முன்னதாக கடந்த May மாதத்தில் தனது அமைச்சரவைக்கு பிரதமர் ஏழு முன்னுரிமைகள் கொண்ட ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

Related posts

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan

ஊழல் விசாரணையில் ஏழு Toronto காவல்துறை அதிகாரிகள் கைது!

Lankathas Pathmanathan

வாகனம் மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம் – 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment